Translate to Tamil (எப்பொழுது/எப்போது – sentences)
- When can we eat?
- When do you study?
- When did you buy it?
- When did you return?
- When does it arrive?
- When will school be over?
- When will you leave?
- When did you come home?
- When is your birthday?
- When will you be back?
- When did he go to Europe?
- When did it begin to rain?
- When did you come to London?
- When do you usually get up?
- When are you going to leave?
- When is a good time for you?
- When can I see you again?
- When will your book come out?
- When should I return the car?
- When did she break the chair?
- When did we last meet?
- When did the wedding take place?
- When did you start studying Tamil?
- When will you come back to school?
- When does the next plane leave?
Review your answers:
- நாங்கள் எப்போது சாப்பிடலாம்?
- நீ எப்போது படிப்பாய்?
- நீ எப்போது அதை வாங்கினாய்?
- நீ எப்போது திரும்பி வந்தாய்?
- அது எப்போது வரும்?
- பாடசாலை எப்போது முடியும்?
- நீ எப்போது கிளம்புவாய் (leave)?
- நீ எப்போது வீட்டிற்கு வந்தாய்?
- உன் பிறந்தநாள் எப்போது?
- நீ எப்போது திரும்பி வருவாய்3?
[You may be translated as நீங்கள் (respectful) after this point] - அவர் எப்போது ஐரோப்பாவுக்குச் போனார்?
- எப்பொழுது மழை பெய்யத் தொடங்கியது?
- நீங்கள் எப்போது லண்டனுக்கு வந்தீர்கள்?
- நீங்கள் வழக்கமாக (usually) எப்போது எழும்புவீர்கள் (get up)?
- நீங்கள் எப்போது கிளம்புவீர்கள்?
- உங்களுக்கு எப்போது நல்ல நேரம்?
- நான் எப்போது உங்களை மீண்டும் பார்க்க முடியும்?
- உங்கள் புத்தகம் எப்போது வெளிவரும்?
- நான் எப்போது காரைத் திருப்பித் தர வேண்டும்?
- அவள் எப்போது நாற்காலியை உடைத்தாள்?
- நாங்கள் கடைசியாக எப்போது சந்தித்தோம்?
- திருமணம் எப்போது நடந்தது?
- தமிழ் படிக்க எப்போது ஆரம்பித்தீர்கள்?
- நீங்கள் எப்போது பாடசாலைக்குத் திரும்புவீர்கள்?
- அடுத்த விமானம் எப்போது புறப்படுகிறது?