Lesson 30. Shopping (Spoken)

1. Learn some phrases you can use at a shop:

  • உங்களிடம் X ரூபாவுக்கு சில்லறை மாற்ற முடியுமா? – Do you have change for X rupees?
  • எனக்கு X-உம் Y-உம் Z-உம் தரலாமா? – Can you give me X, Y, and Z?
  • X-இன் விலை எவ்வளவு? / X என்ன விலை? – What is the price of X?
  • 100 கிராம் X-க்கு 100 ரூபாய் – For 100 grams of X, 100 rupees.
  • எனக்கு Y கிடைக்குமா? – Can I get Y?
  • அதற்கு 200 ரூபாய் ஆகும் – That will be 200 rupees.
  • விலை அதிகம் – The price is high.
  • விலை குறைவு – The price is low.
  • உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா? – Do you want anything else?
  • அவ்வளவுதான் – Only that.
  • இந்தா / இந்தாருங்கள் – Here you go!

2Watch the video below:

3. Watch the video again with the Tamil script:
(If necessary, you may turn on English subtitles to see the translations)

4. Answer the following questions:

  1. குடும்பம் இரவு உணவுக்கு என்ன சாப்பிடப் போகிறது?
  2. அவர்கள் எப்போது இரவு உணவு சாப்பிடுவார்கள்?
  3. மகளுக்கு ஏன் பசிக்கிறது?
  4. அம்மா எங்கே போகிறார்? எதற்காக?
  5. பிள்ளை ஏன் தாயுடன் செல்ல முடியாது?
  6. அம்மா கடையில் என்ன வாங்க வேண்டும்?
  7. கடைக்காரர் தனது கடையில் என்ன விற்கிறார்? அவர் என்ன விற்பதில்லை?
  8. அம்மா என்னென்ன பழங்கள் வாங்குவார்? அம்மா எத்தனை பழங்கள் வாங்குவார்?
  9. அம்மா வேறு ஏதாவது வாங்குகிறாரா? 
  10. ஐந்து வாழைப்பழங்களின் விலை என்ன?
  11. இரண்டு சிவப்பு ஆப்பிள்களின் விலை என்ன?
  12. திராட்சை பழங்களின் விலை எவ்வளவு?
  13. மொத்தத்தில், பழங்களுக்காக அம்மா எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?
  14. பால் என்ன விலை?
  15. அம்மா கடைக்காரருக்கு மொத்தமாக எவ்வளவு கொடுக்க வேண்டும்?
  16. அம்மா கடைக்காரருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்?
  17. கடைக்காரரிடம் அம்மா என்ன கேட்டார்?
  18. அதன் பிறகு என்ன நடந்தது?

5. Review the answers:

  1. அவர்கள் இரவு உணவுக்கு ஆப்பம் சாப்பிடப் போகிறார்கள்
  2. அவர்கள் எட்டு மணிக்கு இரவு உணவு சாப்பிடுவார்கள்.
  3. எல்லாப் பழங்களும் முடிந்துவிட்டதால் மகள் பசியுடன் இருக்கிறாள். / எல்லாப் பழங்களும் முடிந்துவிட்டன என்றபடியால் மகள் பசியோடு இருக்கிறாள்.
  4. பழங்கள் வாங்க அம்மா அருகில் உள்ள கடைக்குப் போகிறார்.
  5. பிள்ளை நாளைக்கு நடக்க இருக்கும் தமிழ் பரீட்சைக்கு படிக்க வேண்டும். அதனால் பிள்ளை தாயுடன் கடைக்கு செல்ல முடியாது.
  6. அம்மாவுக்கு பழங்களும், பாணும், பாலும் வேண்டும்.
  7. கடைக்காரர் தனது கடையில் பழங்கள் விற்கிறார் ஆனால் பாண் விற்க மாட்டார்.
  8. அம்மா ஐந்து வாழைப்பழங்களும், இரண்டு சிவப்பு ஆப்பிள் பழங்களும், ஒரு கிலோ திராட்சைப் பழங்களும் வாங்குகிறார்.
  9. மேலதிகமாக அம்மா இரண்டு லிட்டர் பால் வாங்குகிறார்.
  10. ஒரு வாழைப்பழம் 100 ரூபா வீதம், 5 பழங்களுக்கு 500 ரூபாய்.
  11. ஒரு சிவப்பு அப்பிள் 20 ரூபாய். எனவே 2 அப்பிள்களுக்கு 40 ரூபாய். 
  12. 100 கிராம் திராட்சைப் பழங்களுக்கு 50 ரூபாய் ஆகும். எனவே ஒரு கிலோ திராட்சைப் பழங்கள் 500 ரூபாய்.
  13. மொத்தத்தில், பழங்களுக்கு அம்மா 1040 ரூபா கொடுக்க வேண்டும்.
  14. ஒரு லீட்டர் பாலின் விலை 500 ரூபாய். இரண்டு லீட்டர்  பாலுக்கு 1000 ரூபாய்.
  15. அம்மா கடைக்காரருக்கு மொத்தமாக 2040 ரூபாய் கொடுக்க வேண்டும்.
  16. அம்மா கடைக்காரருக்கு 5000 ரூபாய் கொடுத்தார்.
  17. “உங்களிடம் 5000 ரூபாய்க்கு சில்லறை மாற்ற முடியுமா?” என்று அம்மா கடைக்காரரிடம் கேட்டார்.
  18. அதன் பிறகு பணம் பரிமாறப்பட்டது பின்னர் தாய் வீட்டுக்குச் சென்றார்.

6. Use breakout rooms: With a partner pretend one person is a shop-keeper and the other is a customer.

  • Greet each other
  • Ask the customer what he/she is looking for
  • Ask for an item
  • Ask for the item’s price
  • Say that the item is expensive / cheap
  • Ask the shopkeeper to reduce the price
  • Buy another item
  • Ask for the total price
  • Thank the shop keeper and leave

7. Continue to Learn Tamil!

Like any language you learn in 30 lessons, you will forget your Tamil if you don’t practice it regularly.

That’s why we’ve compiled a list of films, books, and other materials that you can keep reading and watching to practice your Tamil. Please follow our instagram page for fresh content that will help you work on your Tamil, and consider taking our Intermediate Course to level up your Tamil.

Apart from this, try to find someone to talk to regularly in Tamil, ideally a friend or a family member. Don’t hesitate to ask your instructors for recommendations!

8. Review New Vocabulary

  • சில்லறை – notes and coins (of smaller denominations); change.
  • தா (தர, தந்து) -same as கொடு, i.e. give; pass on; pay (back); deliver.
  • மாறு (மாற, மாறி) – change; adapt (to new conditions, etc.)
  • அதிகம் (-ஆக, -ஆன) – that which is more (than what is normal, fair, etc.).
  • குறைவு (-ஆக, -ஆன) – low; less. OR inadequate nature; insufficiency; deficiency
  • குறை – reduce (the number, capacity, etc.); cut down.
  • வீதம் – rate; ratio.
  • சதவீதம் – percentage
  • ரூபாய் – rupee
  • மொத்தம் – total; gross.
  • மொத்தம் (-ஆக, -ஆன) – complete; the whole (of sth.)
  • முழுமை (-ஆக, -ஆன) – completion; wholeness
  • தாமதமாகும் – will be late
    • தாமதம் (-ஆக, -ஆன) – delay; being late.
    • ஆகு (ஆக, ஆகி/ஆய்) – be (in the specified state, condition); become (s.o. or sth. or in such a way); change (into something else); happen (as a new state, condition, event).
  • இப்பொழுது / இப்போது – in this period (of the present); now; at this time or moment; just now.
  • முடி (முடிய, முடிந்து) – (of an act, an event) come to an end; come to a close; turn (specified age); complete; end (in or with sth.)
  • அருகில் – near; close to. 
  • பரீட்சை – exam
  • திராட்சைப் பழம் – grape
  • பணம் – money
  • என்னென்ன = என்ன + என்ன – what and what / what types
  • மேலதிகமாக = மேல் + அதிகமாக – further, additionally
  • எதற்காக = எது + காக – for what?
  • நூறு – one hundred
  • இருநூறு – two hundred
  • ஐநூறு – five hundred
  • ஆயிரம் – a thousand
  • கிராம் – gram
  • லீட்டர் – litre
  • கிலோ – kilo
  • பரிமாறு (பரிமாற, பரிமாறி) – exchange
Go to Lesson 29Lesson MenuGo to Lesson 30